என் மலர்
நீங்கள் தேடியது "வெண்கலப் பதக்கம்"
- கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

- மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது.
- பாரா பேட்மிட்டன் போட்டியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குமாரபாளையம்:
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பி யன்ஷிப் பாரா பேட்மிட்டன் போட்டி ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடை பெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த இளை ஞரை பெற்றோர் ரகுபதி, வேதநாயகி, விடியல் பிர காஷ், இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர் இர்பான் உள்பட பலரும் பாராட்டி னர். இவர் 2024-ல் பாரீ ஸில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்.






