என் மலர்
நீங்கள் தேடியது "கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி"
- கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 6 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
தமிழ்நாடு மாநில அளவிலான டேக்வாண்டோ கியோருகி பூம்சே சாம்பியன்ஷிப் 2021-22-க்கான போட்டி தருமபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
6 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
முதல் இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த மாதம் ஓசூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொது செயலாளர் சித்தேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க தலைவர் சாக்ரடீஸ் தலைமை வகித்தார்.
கவுரவ விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களை வழங்கினார்.






