என் மலர்
உள்ளூர் செய்திகள்
விளையாட்டு போட்டியில் பெருமாநல்லூர் பள்ளி மாணவிகள் சாதனை
- திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
- இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.