search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngsters"

    • ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
    • விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    • 2 வாலிபர்கள் சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரையும், அவரது 17 வயது மகளையும் பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் கோபி என்கிற காளீஸ்வரன்(வயது26) ,கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுபாஷ்(26) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், இதனை தட்டிக்கேட்ட அவரது தாயாரையும் கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் பலமுறை நடந்ததால் பயந்து போன அவர்கள் இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த 2 வாலிபர்களையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் புகாரை விசாரிக்க தாமதமானதால் தாயும், மகளும் போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஆறாகுளம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார். இதையடுத்து அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவரது கூட்டாளிகள் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் இருப்பதாக அவர் தெரிவித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை மடக்கி பிடித்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் நவீன் குமார்(வயது 27),அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி அண்ணாதுரை என்பவரது மகன் வசந்தகுமார்(22) , திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்த பகுதி இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும் அவர்கள் தொடர்ச்சியாக கத்தி போட்டனர். கத்தி போடும் போது இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இத்துடன் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் பொங்கல் பானையின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வகையில் வாள் தனித்து நிற்கும் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வினோத விசேஷம் நடத்தப்படுவதால் கணக்கம்பாளையம் மட்டுமல்லாது பெருமாநல்லூர் திருப்பூர் காங்கேயம் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த அதிசய வாளினை காண வந்தனர்.

    • ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

    பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(21) அமல்ராஜ் (22) இருவரும் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் அருகருகே வசிக்கும் இவர்கள் நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் பிரகாசிற்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக இருவரும் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை தனது உபயோகத்திற்காக அமல்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தனக்கு வேலை இருப்பதா கவும் வெளியில் செல்ல வேண்டி இருப்பதா கவும் கூறி பிரகாஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷின் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பிரகாஷின் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பல் ஆனது . இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகார் என் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கேட்டு கொடுக்காத காரணத்தால் அமல்ராஜ் மோட்டார் சைக்கிள் தீ வைத்தது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அமல்ராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்க் மூலம் https://bit.ly/3ND1U95 தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து இணைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

    தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்த பின்பு, தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    மேலும், கதவு எண்.168, முகமதியா நகர்(எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி. ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
    • ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாதிரி நூலகம் ஒன்றும், இரண்டாம் நிலை கிளை நூலகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளத்தில் இரண்டாம் நிலை நூலகமும், கணியூர், கொமரலிங்கம் உட்பட பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தளி ரோட்டில் இருந்த கிளை நூலகம் மட்டும் மாதிரி நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. பிற நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், அரசு நூலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால், இரண்டாம் நிலை நூலகங்களில் போதியளவு புத்தகங்கள் இருப்பதில்லை. குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராக தேவையான, கட்டமைப்பு வசதிகள் எந்த நூலகத்திலும் இல்லை. தனியாக இருக்கை வசதி, கூடுதல் புத்தகங்கள், கழிப்பிட வசதியில்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். குடிமைப்பணிகள் தேர்வு பிரிவு அனைத்து கிளை நூலகங்களிலும் துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து சென்றதும் தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபா ளையம் பிரிவு காளியப்பநகர் 2-வது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அனுசுயா (வயது63).இவர் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள் மோட்டா ர்சைக்கிளில் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் ,செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அனுசுயா நல்லூர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார்வழ க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தெருவை தள்ளி உள்ள ராஜலட்சுமி(38) என்ற பெண்ணும்அடிக்கடி அனுசுயா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அனுசுயாவின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சை க்கி ளில் வந்து சென்றதும் தெரிய வந்தது. மோட்டார்சைக்கிளின் எண்கள் மூலம் நகைகளை பறித்துசென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டி யைசேர்ந்த மாதேஷ்(24), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) மற்றும்இவர்கள் நகையை பறித்து செல்ல உதவியது ராஜலட்சுமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பறித்து சென்ற 6 பவுன் நகைகளையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    • பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவினாசி :

    அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் பல்லடம் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகபந்து தாஸ் (வயது34) என்பதும் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பாலசுப்பிரமணியம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
    • தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). இவர் அவினாசி கோவை புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டனர். அப்போது பாலசுப்பிரமணியன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார் .அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மதுரை திருவிடாகம் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராமன் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
    • போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

    தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்

    கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×