என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
  X

  கோப்புபடம்.

  பல்லடம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று மறைந்தனர்.
  • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்

  பல்லடம் :

  பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62) இவரது மனைவி ஜானகி(56) கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சம்பவத்தன்று மாலை ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில், பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அப்பாஸ் (23) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் (திலீப் ராஜ் 30,)ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×