search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள்"

    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
    • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

    அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

    சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கார் சாவியை பறித்து தலையில் வெட்டி துணிகர கொள்ளை
    • 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் பிரசாந் (வயது29). கால்டாக்சி டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் இரவு பணியில் இருந்த போது கால்டாக்சி ஆப் மூலமாக சின்னியம்பாயைத்தில் இருந்து டீச்சர் காலனி செல்வதற்கு கார் புக்கிங் செய்யப்பட்டது.

    இதனையடுத்து டாக்சி டிரைவர் பிரசாத் புக் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த 5 வாலிபர்கள் காரில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வெங்கடாபுரத்தில் நண்பர் ஒருவரை இறக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து பிரசாத் காரை ஓட்டிக்கொண்டு மாநராடு மைதானம் அருகே சென்று காரை நிறுத்தினார்.

    அப்போது 5 பேரும் சேர்ந்து திடீரென பிரசாத்தி டம் கார் சாவியை பறித்த னர். அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டினர். பின்னர் பிரசாத்திடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்த னர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை மிரட்டி காருடன் ராவுத்தூர் ரெயில்வே கேட் அருகே சென்றனர். பின்னர் காரை கொடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கால்டாக்சி டிரைவர் பிரசாத் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • கல்வீசி தாக்கியதில் 5 வாகனங்கள் சேதம்
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

    கோவை,

    கோவை சின்னவேடம்பட்டி அருகே அஞ்சுகம் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இங்கு 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு ஒரத்தில், அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் வந்த வாலிபர்கள் திடீரென அதிக சத்தம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். வாக்குவாதம் முற்றவே வாலிபர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் அங்கு கிடந்த கற்களை எடுத்தும், ஒருவர் மீது ஒருவர் வீசினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மீதும் கற்களை தூக்கி வீசியதில், 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இங்கு ஒருவித அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்து, இதுபோன்ற இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • மதுரையில் வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தா மரை கண்ணன் (வயது53).இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் அறை கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு கரையான் மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரைத்துறை காமராஜர் புரம் ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராமர் (45). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் பூச்சிமருந்தை தின்று மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நாகவல்லி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார்.
    • ஊழியர் ராமரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார். இவர் நேற்று மாலை வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியை செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரிசையில் நிற்காமல் வந்தனர். தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்கள்.

    அப்போது பணியில் இருந்த ராமர், வரிசையில் வரும்படி கூறினார். இதையடுத்து வரிசையில் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள், எங்களையே வரிசையில் வர சொல்கிறாயா எனக் கேட்டு ஊழியர் ராமரை தாக்கினர். 

    இதில் காயமடைந்த ராமரை, அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை க்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து. 2 வாலிபர்களை அடை யாளம் கண்டனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், பெட்ரோல் பங்க் விற்பனையாளரை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரை திடீர் நகர் பகுதியில் கொலை திட்டத்திற்காக வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர்.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தே–கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களி–டம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொலை திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    யாரை கொலை செய்ய அவர்கள் பதுங்கி இருந்தார்கள், எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    • வீடியோ எடுத்த வாலிபர்கள், ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.
    • வாலிபர்கள் அமர்ந்திருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.

    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காக பலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அதுபோன்று வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வீடியோ எடுக்கும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் இளைஞர்கள் பலர், உயிரை பணயம் வைத்து வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள்.

    அதுபோன்ற வீடியோ எடுத்த வாலிபர்கள், ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் மலப்பரம் மாவட்டம் காளிக்கா கெட்டுங்கால் சிரா ஆற்றில் குளிபபதற்காக கருளா பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சென்றனர். அப்போது அவர்கள், அங்கு ஆற்றுக்கு மேலே வளைந்தபடி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் மீது ஏறி நின்று, அங்கிந்து ஆற்றுக்குள் குதிப்பது போன் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட திட்டமிட்டனர்.

    அதன்படி 4 வாலிபர்கள், மரத்தின் மேல் ஏறி அமர, கரையில் இருந்து சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது வாலிபர்கள் அமர்ந்திருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் மரத்தின் மேல் அமர்ந்திருந்த வாலிபர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். ஆற்றில் முழுவதுமாக தண்ணீர் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மரம் முறிந்து வாலிபர்கள் ஆற்றுக்குள் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர்.
    • மது பழக்கத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி முத்து (வயது 31). இவரது மனைவி குருவம்மாள். மாரிமுத்து பால் கறப்பது, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கண வன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மனைவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை விற்று மது குடித்துள்ளார். இதை அறிந்த மனைவி அவரை கண்டித்தார்.

    இதனால் மனம் உடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் குருவம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே சாட்சி யாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (24). இவரது மனைவி மாரிச்செல்வி (21). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். ராமானுஜத்துக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு ராமானுஜம் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்துள்ளார்.

    உடனே சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ராமானுஜம் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே இருந்த விளக்கை அணைப் பதற்காக மாரிச்செல்வி சென்றார். அப்போது அங்கு இருந்த இரும்பு தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கியபடி ராமானுஜம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரையும், அவரது 17 வயது மகளையும் பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் கோபி என்கிற காளீஸ்வரன்(வயது26) ,கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுபாஷ்(26) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், இதனை தட்டிக்கேட்ட அவரது தாயாரையும் கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் பலமுறை நடந்ததால் பயந்து போன அவர்கள் இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த 2 வாலிபர்களையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் புகாரை விசாரிக்க தாமதமானதால் தாயும், மகளும் போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

    ×