search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Adolescents"

  • வளரிளம் பருவம் மிக முக்கியமானது.
  • இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

  பள்ளியிலிருந்து உங்கள் குழந்தையின் ஆசிரியர், உங்கள் மகள் அல்லது மகனை பற்றி புகார் கூறும் நிலை பல பெற்றோர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். இவ்வளவு நாளாக நன்றாக இருந்த உங்கள் மகன் இப்பொழுதெல்லாம் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை.

  எப்பொழுதும் மற்ற பிள்ளைகளிடமே பேசிக்கொண்டிருக்கிறான். கண்டித்தால் உடனே அழுது விடுகிறானே தவிர மாறுவது இல்லை.

  அவன் நண்பர்களிடமும் அடிக்கடி சண்டை போடுகிறான், அடித்தும் விடுகிறான் என்று குறை கூறுவார்கள். இதை கேட்ட பெற்றோர்களுக்கு தன் மகன் ஏதோ பெரிய பிரச்சினையில் இருப்பதாக நினைத்து பயந்து போவார்கள். இது பயப்பட வேண்டிய ஒன்றில்லை. ஆனால் இந்த வளரிளம் பருவம் பற்றி புரிந்து கொண்டால் இந்த காலத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

  டீன் ஏஜ், அடலசன்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் தான் குழந்தையாக இருக்கின்ற நாம் பெரியவர்களாக மாறுகின்ற காலம். இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

  அசட்டு துணிச்சல் இருக்கும், நாம் யார் என நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோம், கனவுகள் அதிகம் வளரும், கூடவே குழப்பங்களும் பயமுறுத்தும், நண்பர்களோடு பயணிக்க ஆசைப்படும், பொழுதுபோக்குகளில் கவனம் செல்லும், பெற்றோர்களின் ஆசிரியர்களின் அதிகப்படியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனம் மறுக்கும், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ரகசியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

  இந்த பருவத்தை பெரியவர்களாகிய நாம் கடந்து வந்தாலும், நம் வீட்டு குழந்தைகள் இப்பருவத்தை கடக்கும் போது அவர்கள் நிலையிலிருந்து பார்க்காமல், அவர்களிடம் கண்டிப்பாக நாம் நடந்து கொள்வது சரியா? மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர்கள் கூறுவது என் பையன் அல்லது என் பெண் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாள்.

  எதை சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள். தான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறாள். மரியாதை இல்லை என்பதுதான்.

  உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த வளரிளம் பருவத்தில் குழந்தைகள் தங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களிடம் தங்களின் மன அலை சூழலை அப்படியே வெளிப்படுத்துகின்றனர். அதாவது தங்களுக்கு உள்ள குழப்பம், உலகை அறிந்து கொள்வதில்

  இருக்கின்ற ஆர்வம், கோபம் எரிச்சல் போன்றவற்றை பெற்ற தாய் தந்தையர்களை தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்? எனவே புரிந்து கொள்ளுங்கள்.

  அதேபோல் இந்த வயதில் நண்பர்களே பிரதானமாக தெரிவார்கள். அவர்கள் சொல்வதெல்லாமே சரியென்று தோன்றும். தன் நண்பன் சொன்னதை கேட்டு உங்களிடம் சண்டை போடுவார்கள். இது எதனால் என்றால் தன்னை பற்றி மதிப்பிடாமல் தன்னை அந்த நண்பன் ஏற்றுக்கொள்வதால்தான்.

  மற்றவர் தன் மேல் கொள்ளும் மதிப்பீட்டை பற்றி அதிகம் கவலைப்படும் வயது இது என்பதால் தன்னைப் போலவே இருக்கும் தன் நண்பர்கள் கூறுவதும் செய்வதும் இவர்களுக்கு தேவ வாக்காக இருக்கும்.

  உங்கள் குழந்தைகள் மேற்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இயல்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறில்லாமல் மிக அமைதியாக இருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த குழந்தை தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அல்லது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயந்து அடக்கி கொண்டுஉங்களுக்கு ஏற்றது போல் நடிக்க வேண்டும்.

  குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடாது. இந்த வயதில் ஏற்படும் எந்த பழக்கமும் பொதுவாக தொடராது. பல மாதங்களாக எதிர்மறை நடத்தை இருந்தாலோ அல்லது அது தவறான விளைவுகளுக்கு வழிவகுத்தாலோ மட்டுமே அதை நாம் மாற்ற வேண்டும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சரியாக புரிந்து கொண்டால் எப்படி சண்டித்தனம் பண்ணும் குழந்தையையும் மிக இயல்பாக வழிக்கு கொண்டு வர முடியும்.

  • மதுரையில் வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தா மரை கண்ணன் (வயது53).இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் வீட்டில் அறை கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு கரையான் மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கீரைத்துறை காமராஜர் புரம் ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராமர் (45). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் பூச்சிமருந்தை தின்று மயங்கி கிடந்தார்.

  உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நாகவல்லி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர்.
  • மது பழக்கத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி முத்து (வயது 31). இவரது மனைவி குருவம்மாள். மாரிமுத்து பால் கறப்பது, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கண வன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

  இந்த நிலையில் மனைவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை விற்று மது குடித்துள்ளார். இதை அறிந்த மனைவி அவரை கண்டித்தார்.

  இதனால் மனம் உடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் குருவம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிவகாசி அருகே சாட்சி யாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (24). இவரது மனைவி மாரிச்செல்வி (21). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். ராமானுஜத்துக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு ராமானுஜம் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்துள்ளார்.

  உடனே சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ராமானுஜம் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே இருந்த விளக்கை அணைப் பதற்காக மாரிச்செல்வி சென்றார். அப்போது அங்கு இருந்த இரும்பு தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கியபடி ராமானுஜம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை தெற்குவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலத்தின் கீழ்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை கண்டதும் 2வாலிபர்கள் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த ரவிச்சந்திரன், அவர்களிடம் சோதனை செய்தபோது வாள், அரிவாள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரவிச்சந்திரன் அந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவனியாபுரம் திருப்பதி நகர் 8-வது தெரு, கணேசன் மகன் ரூபன் (24), அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் இருளப்பன் மகன் தமிழ் இனியன் (19) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

  மதுரை

  அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி கணேசநகர் முதல்தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கணேசமூர்த்தி(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக மன விரக்தியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பி.பி.குளம் மருதுபாண்டியர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (32). நிரந்தர வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளிமுத்துவின் தாய் பாண்டிச்செல்வி தல்லாகுளம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  • இன்று அதிகாலை 1.45 மணி அளவில், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
  • 2 வாலிபர்கள், ரஞ்சித்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடினர்.

  சேலம்:

  சேலம் மெய்யனூர் வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

  இன்று அதிகாலை 1.45 மணி அளவில், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்த 2 வாலிபர்கள், ரஞ்சித்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடினர்.

  திடீரென கண் விழித்த ரஞ்சித்குமார், இதை பார்த்து கூச்சலிட்டார். அதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த 2 வாலிபர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் பொன்னம்மா பேட்டை திப்பு நகர் பகு தியை சேர்ந்த சாகுல் ஹமீது (32), சேலம் டவுன் பகு தியைச் சேர்ந்த வினோத்கு மார் (27) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • பள்ளிபாளையத்தில் ரவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

  நாமக்கல்:

  நாமக்கல்லை சேர்ந்தவர் பிரபல ரவுடி காசி . இவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக ஆம்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி பள்ளிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் முத்துக்குமார் (28) ,அஜித்குமார் (25) ஆகியோர் காசிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டினர்.

  நகராட்சி அதிகாரிகளி–டமும், போலீசிடமும் உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக முத்துகுமார், அஜித்குமார் 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

  • கஞ்சா விற்ற 4 வாலிபர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
  • தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை

  கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

  மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று இரவு மின்சார சுடுகாடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

  அப்போது 4 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.450 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி, சங்கு பிள்ளை மடம் முருகன் மகன் மணிகண்டன் என்ற ஒன்னரை மணி (22), சிந்தாமணி, வீமாபிள்ளை சந்து முருகன் மகன் மணிமாறன் என்ற குட்டை மணி (19), திருப்பரங்குன்றம், வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (19), மேல அனுப்பானடி, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

  இதனை தொடர்ந்து ஆயுதங்களுடன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட 4 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

  தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • திருப்பரங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து சென்று விட்டனர்.

  மதுரை

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜு (வயது48).இவர் பெரியரத வீதி முஸ்லீம் பேட்டை அருகில் சென்ற போது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து சென்று விட்டனர்.

  இது குறித்து ராஜு திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கோட்டை தெருவை சேர்ந்த சேது மகன் சரத்குமார் (28), கோடாங்கி தோப்புவை சேர்ந்த நாகராஜ் மகன் அரவிந்தன் (23), திருப்பரங்குன்றம் பைக்காராவை சேர்ந்த முருகேசன் மகன் அழகு சுந்தரம் (23) என்று தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
  • போதைப் பொரு ட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

  அந்தியூர்:

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

  இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று அவர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

  இதில் அவர்கள் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

  இதையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.