ரவுடிக்கு ஆதரவாக போஸ்டர் 2 வாலிபர்கள் கைது

பள்ளிபாளையத்தில் ரவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
ரவுடிக்கு ஆதரவாக போஸ்டர் 2 வாலிபர்கள் கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல்லை சேர்ந்தவர் பிரபல ரவுடி காசி . இவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக ஆம்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி பள்ளிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் முத்துக்குமார் (28) ,அஜித்குமார் (25) ஆகியோர் காசிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டினர்.

நகராட்சி அதிகாரிகளி–டமும், போலீசிடமும் உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக முத்துகுமார், அஜித்குமார் 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

X

Maalai Malar
www.maalaimalar.com