ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை தெற்குவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலத்தின் கீழ்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை கண்டதும் 2வாலிபர்கள் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த ரவிச்சந்திரன், அவர்களிடம் சோதனை செய்தபோது வாள், அரிவாள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரவிச்சந்திரன் அந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவனியாபுரம் திருப்பதி நகர் 8-வது தெரு, கணேசன் மகன் ரூபன் (24), அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் இருளப்பன் மகன் தமிழ் இனியன் (19) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com