என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது

    • விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமான பிரச்சினை இருந்துள்ளது.
    • அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கண்டியன்கோவில் ஊராட்சி தங்காய்புதூரைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மனைவி சுலோச்சனா (வயது 64). இவரது மகள் கோமதி (38). பேத்தி ஜீவிகா (12 ). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கதிர்வேல்( 25 ) மற்றும் முத்துசாமி என்பவரது மகன் விஜயகுமார் (28) ஆகிய 2 பேரும் வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்கனவே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமான பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் சுலோச்சனா வீட்டிற்கு வந்த 2 பேரும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுலோச்சனா அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதிர்வேல் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×