வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் - 2 வாலிபர்கள் கைது

வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர். 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகரம் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முத்தணம்பாளையம் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர். அப்போது அந்த வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து சென்றனர்.

இதனையடுத்து வீட்டிற்குள் அதிரடியாக போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு தனி அறையில் இருந்த 24 வயது மதிக்கத்தக்க 2 அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில் முத்தணம்பாளையம் பகுதி சேர்ந்த சக்திவேல் (34), அருண் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com