என் மலர்
நீங்கள் தேடியது "jewelery"
- பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
- மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (65). பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
இதுகுறித்து வேலூர் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பத்திரகாளி வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்றார்.
- சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது சி.சி.டி.வி. காட்சி ஆய்வில் தெரியவந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவில் வசித்து வருபவர் திருமலைச்சாமி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்திரகாளி (வயது 50).
இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையுள்ள மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தவறி விழுந்த அந்த பையை யாரோ மர்ம நபர் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து பத்திரகாளி உடனடியாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது தெரியவந்தது.
உடனடியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மூதாட்டியிடம் இருந்து பையை போலீசார் மீட்டு பத்திர காளியிடம் ஒப்படைத்தனர். 5 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மோகனப்பிரியா ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 28). இவர்களுக்கு ரித்விக் என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மோகனப்பிரியா தனது மகனுடன் ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மோகனப்பிரியாவை கீழே தள்ளியுள்ளனர்.
இதில் வண்டியில் இருந்து மோகனப்பிரியா மற்றும் ரித்விக் ஆகியோக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த மர்ம நபர்கள் மோகனப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மோகனப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோகனப்பிரியாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள் திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆகாஷ் (24 ), அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் முத்துப்பாண்டி (20) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் மாதவன் (37 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலியின் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
- ராஜேஷ் என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணை தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ஜெயசீலி (வயது 70). இவர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயசீலி அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்படி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி முத்தையாபு ரம் சந்தோஷ்நகரை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
உடனே தனிப்படை போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 5½ பவுன் தங்க செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- சுப்புலட்சுமி பெண்களிடம் அதிகமான வட்டி பெற்று தருவதாகவும், மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் செய்தும் வந்துள்ளார்.
- இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணணை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அகரம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது42) என்பவர் தூத்துக்குடி எம்.சவேரியார்புரம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் இப்பகுதி பெண்களிடம் நெருங்கி பழகி மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான உதவிகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் பெண்களிடம் அதிகமான வட்டி பெற்று தருவதாகவும் மேலும் பல்வேறு கவர்ச்சி கரமான அறிவிப்புகளையும் செய்தும் வந்துள்ளார். இதன்படி நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களிடம் சுமார் 600 பவுனுக்கு மேல் தங்க நகைகளை பெற்று சுப்புலட்சுமி தலை மறைவாகி விட்டார். இதனால் நகைகளை கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணணை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். புகார் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நூதன முறையில் நகைகளை மோசடி செய்த சுப்புலட்சுமி மற்றும் அவருடன் இருந்த ஒரு ஆண் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடம் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுவதுடன் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ள–னர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மூலக் கொத்தளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த–வர் தங்கமணி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 28-ந்தேதி பெங்களூ–ரில் உள்ள மகன்கள் வீட் டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
இவரது வீட்டை ராமநா–தபுரம் அருகே புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் மனைவி பஞ்ச–வர்ணம் (55) என்பவர் பரா–மரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் காலை–யில் வீட்டை சுத்தம் செய்வ–தற்காக சென்றபோது அங்கு முன்வாசல் கதவு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து உடனடியாக ராமநாதபுரம் பஜார் போலீ–சாருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் போலீ–சார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பெங்களூர் சென்ற ஓய்வு பெற்ற அதி–காரி தங்கமணி ராமநாதபு–ரத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்த போது வீட்டுக்குள் இருந்த 51 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.40 ஆயிரம், வெள்ளி பொருட் கள் கொள்ளை போயிருப் பது தெரிய வந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீ–சார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வரு–கின்றனர். நேற்று மோப்ப–நாய், கைரேகை நிபுணர்கள் திருடு போன வீடுகளுக்கு சென்றும் எவ்வித முன்னேற் றமும் இல்லை. அதேபோல் இவரது வீட்டிற்கு நீண்ட தூரத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத் தப்பட்டிருப்பதால் திருடர் களை அடையாளம் கண்டு–பிடிப்பது போலீச ருக்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் திருடர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்க ப்பட்டு தீவிரமாக தேடுவ துடன் கண்காணிப்பு பணியி லும் ஈடுபட்டுள்ள–னர்.
- மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார்.
நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
- இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
- போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.
சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.
இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- இன்றும் நாளையும் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை
- ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
புதுச்சேரி:
அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்கள கரமான தொடக்கத்திற்கு உகந்த நாள். ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.
ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.
புதுவையில் நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, பாரதி வீதி, நெல்லுமண்டி சந்து, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் நகைகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- அன்னக்கிளியின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவமனையில் கொடுத்துள்ளார்.
- அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாள முத்து நகரில் உள்ள கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல்.
மளிகை கடை
இவரது மனைவி அன்னக்கிளி (வயது 58). இவர் மாதாநகர் 5-வது தெருவில் வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை வைத்துள்ளார்.
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக குடியிருந்து வருகின்றனர்.
அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அன்னக்கிளி யின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவ மனையில் கொடுத்துள்ளார். அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த சுமார் 3 பவுன் செயின், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ் பெக்டர் முனிய சாமி வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.