என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே வியாபாரி வீட்டில் நகை திருடிய உறவினர் கைது
- அந்தோணிராஜா மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
- விசாரணையில்,பாலசுந்தர் தங்க செயினை திருடியது தெரியவந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் அந்தோணிராஜா (வயது21). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுரேசுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வள்ளகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ந்தேதி அந்தோணிராஜா மற்றும் உறவினர்கள் புதிய ஆடைகள் வாங்க சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தங்கினர். பெண்ணின் சகோதரர் பாலசுந்தரும் (21) அவர்களுடன் தங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசெயின் மாயமாகியிருந்தது.
இதுகுறித்து அந்தோணி ராஜா நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாலசுந்தர் தான் தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.