search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்பு
    X

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சான்றிதழ் வெகுமதி வழங்கி பாராட்டினார். 

    திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்பு

    • கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

    முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.

    காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×