

நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார்.
நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.