என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ் 2"
- என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன்.
- ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பி.டி.கோபிதாஸ் என்ற முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
1957ல் 5ம் வகுப்பு முடித்த கோபிதாஸ் அதன்பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா அரசின் கல்வியறிவு திட்டம் குறித்து அறிந்து 7, 10ம் வகுப்புகளுக்கான படிப்பில் கோபிதாஸ் தேர்ச்சி பெற்றார்.
பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் பேசிய கோபிதாஸ், "பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நான் தினமும் எதையாவது படித்துக்கொண்டு தான் இருப்பேன். அதனால் மீண்டும் பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு 2 மணிநேரம் படிப்பேன். என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன். ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய ஆசிரியர்கள் உட்பட பலரும் என்னை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
கோபிதாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், தற்போது அவர் தனது இளைய மகள் மற்றும் அவர்களது இரண்டு பேராகுலந்திகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
- தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 பேரும், செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35 பேரும் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்று விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
- பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது.
- அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது.
சென்னை:
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் இன்று (12-ந்தேதி) வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தேர்வுத் துறை இணைய தளத்தின் வழியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தர். என்ஜினீயரிங், கலை அறிவியல், வேளாண்மை, மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதனால் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகிறது. உயர்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண் கல்வி தகுதியாக இருப்பதால் மதிப்பெண் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தற்காலிக சான்றிதழ் பெற குவிந்தனர். மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரையிடப்பட்டு அவர் கையொப்பமிட வேண்டும். பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது. அதனால் அந்த பணியில் அனைத்து பள்ளி அலுவலகங்களும் ஈடுபட்டன. பகல் 1 மணிக்கு மேல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் பிளஸ் 2 சான்றிதழ் வாங்குவதற்கு வரிசையில் காத்து நின்றனர்.
- தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.
- இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிளஸ்-2 தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
- மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.
சென்னை:
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆரம்பித்து 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன.
இதற்காக மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.
- வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
- விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் விடை குறிப்பு சமூக வலைதளத்தில் கசிந்ததால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பிளஸ்-2 விடை குறிப்பு சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதி உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந்தேதி வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மே 7-ந் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் அதற்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என பெற்றோர்கள் கருதி தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பிறகு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் இந்த இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது.
- பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. 8 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும்.
சென்னை:
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சா.சேது ராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகிக்க வேண்டும்.
மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர்.
- பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்து இருக்கிறது.
சென்னை:
2022-23-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அந்த மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியில் சேருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வராதவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனை சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு விண்ணப்பித்து, விடைத்தாள் நகலை பெற்றுள்ளனர். அவ்வாறு விடைத்தாள் நகலை பெற்ற மாணவரில் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விடைத்தாள் நகலில் 66 மதிப்பெண் மட்டுமே போடப்பட்டு இருந்த நிலையில், தேர்வு முடிவில் 69 மதிப்பெண் இடம்பெற்று இருந்தது. இந்த நகல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
விடைத்தாளில் ஒரு மதிப்பெண், தேர்வு முடிவில் ஒரு மதிப்பெண் இது எதற்காக போடப்பட்டது? மதிப்பெண்ணை பதிவு செய்யும்போது ஏற்பட்ட குளறுபடியா? அல்லது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக அதிக மதிப்பெண் போடப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தகவல் உண்மையா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வந்து இருக்கிறது.
- 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது.
- வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த முடிவில் திருப்தி இல்லாத 1,300 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கும், 2,300 மாணவர்கள் மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்தனர். இதற்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் 830 மாணவ-மாணவிகள் விடைத்தாள்கள் திருத்தியதில் மொத்த மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. பெரும்பாலும் 10 மதிப்பெண்கள் கொண்ட வினாக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணில் குளறுபடி நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வினாத்தாளை திருத்திய 100 ஆசிரியர்கள் இந்த தவறினை செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தபட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. விசாரணையில் தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
- பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.
சென்னை:
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் பன்மொழி கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக் கையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி. எஸ்.இ.) தொடங்கி உள்ளது.
அந்த வகையில் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்திய மொழிகளில் கல்வியை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கிலமும் ஒரு சில பள்ளிகளில் இந்தியிலும் கற்பித்தல் பணி நடக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020-யானது பள்ளிகளில் தொடங்கி உயர்கல்வி வரை முழுவதும் வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்றுவிக்கும் முறையை கொண்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட் டத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு திட்டமி டப்பட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க மத்திய கல்வி மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் புதிய பள்ளி பாடத்திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மொழியியல் பன்முகத்தன்மை, கலாச்சார புரிதல் மற்றும் மாணவர்கள் இடையே கல்வியை வளர்ப்பதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையாக பன்மொழி கல்வி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.
சி.பி.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இது மாணவர்களுக்கு பன்மொழியில் அறிவாற்றலை வளர்க்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக அவர்கள் பல மொழிகளில் வெளியாகும்போது அடிப்படை நிலையில் இருந்து அவர்களின் தாய் மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த முடிகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
22 அட்டவணைப் படுத்தப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.
இது குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்கு விப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது நாட்டில் 28,886 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.






