என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plus 2"
- விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
- துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளி யாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அர சுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஜூன் 24 மொழிப்பாடம், ஜூன் 25-ஆங்கிலம், ஜூன் 26-கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28-கணினி அறிவியல், புள்ளிவிவரங் கள், உயிர் வேதியியல், ஜூன் 28-இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங் கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.
ஜூலை 2-மொழிப் பாடம், ஜூலை 3-ஆங்கிலம், ஜூலை 4-இயற்பியல், பொருளியல், ஜூலை 5-கணினி அறிவியல், தொடர்பி யல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6-தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.
இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.
- பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்.
- உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது.
தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில், நாளை பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
- தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலை.
தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்தலில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.
இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.
- பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
- பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.
சென்னை:
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் பன்மொழி கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக் கையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி. எஸ்.இ.) தொடங்கி உள்ளது.
அந்த வகையில் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்திய மொழிகளில் கல்வியை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கிலமும் ஒரு சில பள்ளிகளில் இந்தியிலும் கற்பித்தல் பணி நடக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020-யானது பள்ளிகளில் தொடங்கி உயர்கல்வி வரை முழுவதும் வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்றுவிக்கும் முறையை கொண்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட் டத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு திட்டமி டப்பட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க மத்திய கல்வி மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் புதிய பள்ளி பாடத்திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மொழியியல் பன்முகத்தன்மை, கலாச்சார புரிதல் மற்றும் மாணவர்கள் இடையே கல்வியை வளர்ப்பதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையாக பன்மொழி கல்வி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.
சி.பி.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இது மாணவர்களுக்கு பன்மொழியில் அறிவாற்றலை வளர்க்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக அவர்கள் பல மொழிகளில் வெளியாகும்போது அடிப்படை நிலையில் இருந்து அவர்களின் தாய் மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த முடிகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
22 அட்டவணைப் படுத்தப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.
இது குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்கு விப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது நாட்டில் 28,886 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- 19-ந் தேதி முதல் 26ந் தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது
- தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் :
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளாதவர்களுக்கும் வருகிற 19-ந்தேதி முதல் 26ந்தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.
மே 10ந்தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும்.
திருப்பூர் :
கடந்த 8ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஒரு மாதம் இருப்பதால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர் விபரத்தை வகுப்பாசிரியர் மூலம் சேகரித்து அவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்த வேண்டும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உதவியோடு ஆலோசனைகளை வழங்கி துணைத்தேர்வெழுத ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆசிரியர் பணியிடம் சூழலுக்கு தக்கவாறு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேவையான உரிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த வாரம் அல்லது மே இறுதியில் துணைத்தேர்வு எழுத உள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்து வருகிறது. பிளஸ் -2 தேர்வு முடிவு 8-ந் தேதி வெளியாகிய நிலையில் தேர்ச்சி பெறாத தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 17ந்தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் நாளை 23-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
- வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி ரிப்பா முதலிடம் பெற்றார். இவரது தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், துணைத்தலைவர் சங்கீதா பிரசாத், நிர்வாகிகள் கிஷோர், அம்பேலா சாகுல் மற்றும் வியாபாரிகள் நேரில் சென்று மாணவி ரிப்பாவுக்கு வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
- ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது.
- மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி. பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகின்றார். இவரது மகன் சிவின்(வயது 17). 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க வேண்டும் என இவரது பெற்றோர்களிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதற்கு இவர்களது பெற்றோர் இந்த படிப்பு படிப்பதற்கு ரூ.72 ஆயிரம் செலவாகும்.அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த படிப்பிற்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்பது தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் தான் படிக்க விரும்பிய பாடத்தில் சேர முடியாது என நினைத்து மனவிரக்தியில் சிவின் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
திருப்பூர் :
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்