குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு வழிகாட்டு முகாம்

கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்ததுஇக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.
வழிகாட்டு முகாமில் கலெக்டர் அரவிந்த் உயர்கல்வி தொடர முடியாத மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடியபோது எடுத்த படம் 
வழிகாட்டு முகாமில் கலெக்டர் அரவிந்த் உயர்கல்வி தொடர முடியாத மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடியபோது எடுத்த படம் 
Published on

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com