என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவகாசி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
    X

    சிவகாசி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

    • தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×