என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில மீனவர்கள் சார்பில் நிதி உதவி
- திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
- அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.






