என் மலர்tooltip icon

    இந்தியா

    எச்.ஐ.வி. பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமை- விடுதி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
    X

    எச்.ஐ.வி. பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமை- விடுதி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

    • சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக லந்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

    இதுகுறித்து சிறுமி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். சிறுமி எழுதிய கடிதங்களை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.

    சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×