என் மலர்
நீங்கள் தேடியது "இளவரசர்"
- எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
- அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.
துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- விட்டோரியோ இமானுவேல் தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்தார்.
- விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று மறைந்தார்.
இத்தாலியின் கடைசி மன்னரின் மகனும், சவோயின் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இதுதொடர்பாக, சவோய் அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் "இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட ஜெனீவாவில் காலமானார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1937ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்த விட்டோரியோ இமானுவேல், 1861 முதல் 1945 வரை ஒருங்கிணைந்த இத்தாலியில் ஆட்சி செய்த அரச குடும்பத்தின் தலைவராக ஆனார்.
அவர் 1946ல் அரியணையை ஆக்கிரமித்த, நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் உம்பர்டோவின் மகன் ஆவார்.
- ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
- மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.
அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.







