என் மலர்

  நீங்கள் தேடியது "Shahrukh Khan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜவான்.
  • ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


  ஷாருக்கான்

  இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  இந்நிலையில், ஜவான் திரைப்படத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அதாவது, ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடி-க்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதனை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ. 120 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த வாரம் ஷாருக்கான் அட்லியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
  • கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

  பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், கடந்த வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் ஷாருக் கான் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
  புதுடெல்லி:

  சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார்.

  தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஜெகதீசன் 41 ரன்னும், ஷரி நிஷாந்த் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

  இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார்.

  இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை முன்னாள் கேப்டன் டோனி ரசித்துப் பார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற டோனி, ஷாருக் கான் கடைசி பந்து சிக்சரை ரசித்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மைத்துனி போதைப் பொருள் வியாபாரி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
  மும்பை:

  சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

  ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. 

  இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.

  போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி என கூறப்படுகிறது.

  இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

  போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
  மும்பை:

  பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

  ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

  இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

  ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், அடுத்ததாக ஷாருக்கான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். #ShahrukhKhan #AmitabhBachchan
  ஷாருக்கான் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார்.

  பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் ஏற்கெனவே ‘பிங்க்’ படத்தில் நடித்துள்ளனர்.  ஷாருக்கான் தயாரிப்பில் முதல் முறையாக அமிதாப் நடிப்பது, ‘பட்லா’ திரைப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #ShahrukhKhan #AmitabhBachchan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero
  இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

  இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

  இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். #IPL2018 #KKRvMI
  ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

  பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.  நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் (Spirit) பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
  ×