'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஷாருக்கான்
ஷாருக்கான்
Published on

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்

சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பதான்

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com