பார்ட்டி ஆரம்பிக்கலாமா..? சர்ச்சைகளுக்கு மத்தியில் அடுத்த பாடலை வெளியிட்ட பதான் படக்குழு..

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் 'பதான்'.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
பதான்
பதான்
Published on

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்

சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பதான்

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடலான 'ஜூம் பூம் தூம்' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான் 'பார்ட்டி ஆரம்பிக்கலாமா?' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பதான்

'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com