என் மலர்
இந்தியா

பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்
- 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்
சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.






