search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescue operation"

    • இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் 40 அடி போர்வெல் குழியில் குழந்தை ஒன்று விழுந்தது.
    • குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு போர்வெல் குழி உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.
    • புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகரில் வெள்ளத்தில் சிக்கிய 1000 பேரை பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.

    விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரத்தில் வீட்டிலேயே குழந்தை பெற்ற தாயையும், குழந்தையையும் போலீசார் மீட்டனர். முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.

    மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டூர்புரம் பகுதியில் 25 பேரும், நீலாங்கரை பகுதியில் 6 பேரும் வீடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 30 பேர், கோட்டூர்புரம் பகுதியில் 15 பேர் என சென்னை மாநகர் முழுவதும் சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப் பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, லயோலா சுரங்கப் பாதை உள்ளிட்ட 10 சுரங் கப்பாதைகள் மூடப்பட்டன.

    சென்னையில் போலீஸ் ஏட்டு ருக்மாங்கதன் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

    • மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
    • அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை

    இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.

    இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).

    அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.

    அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.

    இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.

    ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    "நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.


    • தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மொத்தம் நான்கு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ×