என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்புப் பணி"

    • 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
    • சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன

    டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை முழுமையாக அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

    இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமித் கோயல் தெரிவித்தார்.

    குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

    தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன, இதன் காரணமாக தீ வேகமாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கொல்கத்தா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டது.
    • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருப்பதி:

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    விஜயவாடா,மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்தை மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது.

    அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கியவர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக், சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார். பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது. காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதேபோல் மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார். மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

    கொல்கத்தா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    என்.டி.ஆர் மாவட்டம் நந்தி காமம்-ஐதராபாத், விஜயவாடா செல்லம் ரெயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ஜனஷ்டாபதி எக்ஸ்பிரஸ் ரெயில் மழையின் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் அடுத்த 2 நாட்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

    ×