search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police presence"

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
    • தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.

    அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • பெண்கள் உள்பட 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொட ர்பாக இருதரப்பி னரிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.

    இது தொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதால் கிராமத்தில் அமைதியின்மை நிலவுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன், தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். கோவில் அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு தரப்பினர் ஜெயராமனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் இருதரப்பை சேர்ந்தவர்கள் அங்கு வந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி(வயது36), மருதன்(59), ஆதிலட்சுமி(54) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எதிர் தரப்பை சேர்ந்த கதிரேசன், கருப்பசாமி, மனோஜ் உள்பட 14 பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் ராமலட்சுமி, முருகன், அபிஷேக், மருதன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதலால் ஆத்திப்பட்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    • இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியை சேர்ந்த பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் விசு வஇந்துபரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் அரியானா விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் செய்தனர்.

    ஆனாலும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.எனவே மேற்கண்ட அமைப்புகள் காரமடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை விடுத்தன.

    இந்த நிலையில் இன்று காலை காரமடையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் இந்துமுன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.

    அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் ஏராளமானவர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதில் பா.ஜக வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ், வி.எச்.பி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவப்புகழ், பொதுசெயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்துக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது.
    • ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தது.புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு திரண்ட பா.ஜ.க. வினர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்–க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். அதேபோல் பா.ம.க. வினர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவிற்கு சிலை வைக்க வேண்டும் என தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். இந்த நிலையில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் அங்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ் வாசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.எ்ன்.ஏ., தமி்ன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    அப்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.க, பா.ம.க. வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பின ரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பா விதம் ஏற்படாமல் தடுக்க டி.எஸ்.பி. மித்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, செல்வராஜி ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஆர்.ஐ., சாந்தி, மாயாவதி ஆகியோர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக தலை வர்கள் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கலாம். அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை வைக்க இயலும் என தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் அங்கு பேசி முடிவு மேற்கொள்ள லாம் என தெரிவித்தனர். தலைவர்கள் சிலை வைக்க இடம் பிடிப்பதில், கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

     கடலூர்:

    கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி‌.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர்‌. அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.

    பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்

    நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது‌. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
    • கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்

    ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினரும், பொது மக்கள் என 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    இதில் கோவை, ராமநாதபுரம் உட்பட 5 சரக டி.ஐ.ஜி.கள், 28 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார் இன்று (27-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    ×