search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picketing"

    • குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது மழையூர் கிராமம். இங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அங்கு வந்த 6 பேர் அந்த மாணவனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.

    இதில் அந்த மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர்.

    மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.

    தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனிடையே மாணவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 6 கல்லூரி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    • மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை, ஆதம்பாக்கம், ஜீவன் நகர், 2-வது தெருவில் இருந்து மேடவாக்கம் மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் அங்குள்ள கால்வாய் மீது சிறிய பாலமும் கட்டப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் சாலை அமையும் பகுதியில் உள்ள சில வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். வீடுகளை காலி செய்யவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை தாசில்தார்கள் ராதிகா, காளிதாஸ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க.கிழக்கு பகுதி செயலாளர் பரணி பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ் குமார், லோகேஷ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடவாக்கம் சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத், இன்பா தலைமையிலும் ஏராளமானோர் பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வரவில்லை.
    • அரசூர் மெயின் ரோட்டில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் உள்ளிட்ட பலபகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் அரசூர் கிராம மக்கள் 80 பெண்கள் உள்பட 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் ஏறவில்லை என்று கூறி திருவையாறு மணக்கரம்பை சுப்பிரமணியன் கோவில் அருகே அரசூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் (பொறுப்பு) நெஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன் பேட்டை அருகே பொன்மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ரவாண்டி நெடுசாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொன்மான் மேய்ந்த நல்லூர் கருப்பூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுவழி ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    கிராமமக்கள் சென்று வர மாற்றுவழி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காததால் பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராமமக்கள் பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை விக்ர வாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாபநாசம் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மகாரா ஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது.

    கடந்த இரண்டாண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் நின்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு அதேபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்லணை பூம்புகார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

    • தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர்திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார்.
    • இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே எண்டியூர் பகுதியை சேர்ந்த வர் அய்யனார் (வய32) இவரது நண்பர் லோகப்பி ரியன் (29) இவர்கள்2 பேரும் மோட்டார் சைக்கி ளில் எண்டியூர் கிரா மத்தில் இருந்து திண்டி வனம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதே போல் தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர் (60) திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திண்டி வனத்தில் இருந்து மரக்கா ணம் சென்ற கார் இவர்கள் 3 பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து ஏற்படுத்தி விட்டு டிரைவர் காரை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதில் அய்யனார் மற்றும் லோகப்பிரியன் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ மனை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேகர் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பிரம்ம தேசம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவில் கிரஷர்கள் உள்ளதால் லோடு லாரிகளும் மற்றும் டீசல் எடுத்துக்கொண்டு கார்களும் அதிக வேகமாக சென்று வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் ஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் . இந்த பகுதியில் சாலை அகலப் படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை அங்கிருந்து எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.

    இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.
    • அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மறியல் போராட்டம்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்காரன்விடுதியில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 4-வதுவார்டில் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.

    இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெற்றது.

    வட்டாச்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன்,போராட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயரெங்கன், தனியார் ஒப்பந்ததாரர் தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளில் உடனடியாக பொது குடிநீர் இணைப்பகூடுதலாக அமைத்து தருவது.

    தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தெருவிளக்கு வசதிஏற்படுத்தி தருவது.

    அடுத்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை பிச்சைக்காரன் விடுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பது. அதற்குள் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தினை தேர்வு செய்வது.

    கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கிடைக்க அரசு சார்பில் பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராமு, கஸ்தூரிபாய் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
    • குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சி சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் அவ்வபோது ஏரி ஊட்டப்படுவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் விளை நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.

    தினமும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீனாகி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்யப் உள்ளோம் என்றார்.

    • கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட சாலையை சரிசெய்ய வலியுறுத்தி, கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் முன் அறிவிப்பு இன்றி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்தும் சாலை மறியலை தொடர்ந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து, அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடை யூறாக நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ் (20), பாலசந்தர் (53), ஜான்மதியழகன் (28), யோகேஷ் (21), நிரஞ்சன் (19), மணிகண்டன் (20), வீ.மணிகண்டன் (20) சந்துரு (20), மனோகர் (20), ஐஸ்வரியா (40), சசி (41), ஜோதி (43), மர்லீஸ் (41), சுதா (41), வனிதா (41) உள்ளிட்ட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
    • வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேத்–தி–யாத்–தோப்பு, ஆக.8-

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. தற்–போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செ ய்து நிலக்கரி வெட்டிஎடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங் 2ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்த்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதிது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்படடுள்ளது. மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உளளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளை நிலங்ளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பணி தொடங்கி யது. முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்ேபாது இரவுபகலாக நடந்து வருகிறது. கம்மாபுரம் ஒன்றியம் ஆதனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    என்.எல்.சி. சுரங்க பணிக்காக அங்குள்ள சாலையை உடைத்து கடந்த சில மாதங்களாக வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அக்கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலையை சீரமைத்து தருவதாகவும், மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    ×