search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பாலம் அமைக்க கேட்டு ரெயில் மறியல் போராட்டம்
    X

    மேம்பாலம் அமைக்க கேட்டு ரெயில் மறியல் போராட்டம்

    • இந்த ரெயில்வே கேட் வழியாக உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
    • இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்த வேங்காம்பட்டி பகுதியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.

    200 கிராமங்கள்

    இந்த ரெயில்வே கேட் வழியாக வேங்காம்பட்டி, வாழ குட்டைப்பட்டி, ஏரியூர், செவந்தாம்பட்டி, பாலம்பட்டி, நெ. 3 குமாரபாளையம், கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையம், பொன்பரப்பிபட்டி, மின்னக்கல், மூக்குத்தி பாளையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த பகுதியில் நீண்ட காலமாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மல்லூர் பேரூராட்சியில தீர்மானம் நிறைவேற்றியும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    போராட்டம்

    இதனை கண்டித்து வருகிற 23-ந் தேதி சுற்று வட்டார கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் வேங்காம்பட்டி ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×