search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians"

    • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

    தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

    • ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ேபாக்குவரத்து பாதிப்பு

    உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
    • இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ்களும் பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, அக்கரகாரம், தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை பூசாரிப்பட்டியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பி. எஸ். கே. செல்வம் தலைமையில் பொது மக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நகராட்சியின் 8,9-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் வினியோகம் இல்லை

    இந்த நிலையில் நகராட்சியின் 8,9-வது வார்டுகளை சேர்ந்த கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இதையடுத்து இப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து 8-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தாரமங்கலம் - ஓமலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.
    • விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் , அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.

    மேலும் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்களை இக்குழுவில் சேர்க்காமல் ஒரு சிலர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டபோது எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    • சாக்கடை கால்வாய் அமைக்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி திவ்யா தியேட்டர் அருகே ஊத்துக்குளி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சுமார் 15 பேர், கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து, கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந் துள்ள இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வரு கிறது. இந்த குவாரியில் எந்தவித பாதுகாப்பு விதி முறைகளையும் கடைபிடிக் காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அவ்வாறு வெடி வைக்கும்போது சிதறும் பாறை கற்கள் குடி யிருப்பு பகுதிகளை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும், கால் நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு களும் ஏற்பட்டுள்ளது.

    கல் குவாரியில் வைக்கப் படும் வெடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பாதிக் கப்பட்டு வரும் கிராம மக்கள், அரசு அதிகாரி களிடம் தொடர்ந்து பல முறை புகரளித்தும், இது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதி காரிகள் சிறு விசாரணை கூட செய்ய வரவில்லை என்று மக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ள னர்.

    அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகு திக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. மேலும், அங்குள்ள இரண்டு சிறுவர்கள், கால்நடைகளை தாக்கி காயப்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர். இங்கு வைக்கப்படும் வெடி எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

    பகல் நேரத்தில் கற்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே விழுகிறது. அப் போது யாராவது வீட்டில் இருந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜா மணி ராஜா பொது மக்க ளுக்கு ஆதரவாக, சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந் துள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் பாறைகளுக்கு வெடி வைத்து குவாரி செயல்படுவதால் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    அதனால், இங்குள்ள மக்களின் உயிரை காக்க அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், கனிமவள துறை அதி காரிகள், சுற்றுசூழல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மக்கள் நேர்காணல் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாட்டில் "மக்கள் நேர்காணல் முகாம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடத்த ப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தொண்டராம்பட்டு சரகம், கண்ணுக்குடி மேற்கு கூடுதல் கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது.

    மேற்படி மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 57-வது டிவிசனுக்கு உட்பட்ட களரம்பட்டி முதல் ஸ்ரீராம் நகர் வரை புலிகார தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 20 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியு மாக காணப்படுகிறது.

    சாக்கடை வசதிகள் இல்லை. மழைகாலங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்தால் சாலைகளில் மழைநீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். அப்போது மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மக்கள் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. இது சம்மந்தமாக பல்வேறு மறியல் போராட் டங்கள் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் இரண்டு மாதத்தில் சாலை, சாக்கடை வசதி செய்து தருவதாக கூறி சென்றனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து புலிகார தெருவில் பொது மக்கள் கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீசாரும், அதிகாரி களும் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பத்தூரில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மின்கம்பங்களில் ஏறி விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டுள்ளன. குரங்குகளின் தொல்லை யால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, 4 ரோடு, கூகல் பெர்க் சாலை, காளியம்மன் கோவில் தெரு, அக்னி பஜார், சீதளி வடகரை, தேரோடும் வீதி, ஆறுமுகம் பிள்ளை தெரு, தென்மாட்டு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிகின்றன. வீட்டின் கதவுகள் திறந்திருந்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குரங்குகள் எடுத்து செல்கின்றன.

    மேலும் அருகாமையில் உள்ள கடைவீதி மற்றும் உழவர் சந்தையிலும் காய்கறி கள், பழங்கள், திண்பண்டங்களை தின்று சூறையாடி வருகின்றன. வீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில் ஏறி மின் வயர்களில் குரங்குகள் விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்களையும் பொருட்களை கொண்டு செல்போர்களையும் குரங்குகள் அச்சுறுத்து கின்றன.

    இப்படி நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்கு களை பிடித்து வனபகுதியில் அதனை கொண்டு சென்று விட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • கடலாடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தனிச்சியம் கிராமத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

    இதை கண்டித்து டி.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வாலிநோக்கம் விலக்கு அருகே இன்று காலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக வந்து டி கிருஷ்ணாபுரம் கிராமத்திலேயே ஊராட்சி அலுவலக கட்டிடம் இயங்கும் என தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×