search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
    X

    ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

    • செம்மினிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • கிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாககிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ., வரை மனுக்கள் கொடுக்கப்பட்டு விசா ரணை நடந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அட்டைப்பெட்டி கம்பெனி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், நிலத்தடி நீர் பாதிக்காது என்பதாலும் தொடங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அட்டைப்பெட்டி கம்பெனியினர் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினர். இது குறித்து வாடிப்பட்டி போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவு தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும், மீண்டும் அட்டைப்பெட்டி கம்பெனி பணியை தொடங்குவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு செம்மி னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டல துணை தாசில்தார் தமிழ்எழிலன், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ.வுக்கு மேல் முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×