search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகரம்
    X

    ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகரம்

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×