search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்
    X

    மருத்துவ முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்

    • பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • முகாமில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஜினா பர்வீன் ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்றார்.

    இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட மருத்துவ குழுவினர், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், பொதுமருத்துவம், இசிஜி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தை களுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது.

    இதில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், அரங்கங்குடி குட்டி ராஜா மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதாரம் மேற்பார்வையாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×