search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    34 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணிகள் - ஆறு பேரை காவு  வாங்கிய கட்டிட விபத்து
    X

    34 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணிகள் - ஆறு பேரை காவு வாங்கிய கட்டிட விபத்து

    • தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மொத்தம் நான்கு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    Next Story
    ×