என் மலர்
உலகம்

பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரம் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி
- உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடரில் நடித்தவர்.
- உமர் ஷா உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லாகூர்:
பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.
உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.
டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story






