என் மலர்
உலகம்

VIDEO: துபாய் மீது ஈரான் தாக்குதல் - சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் பலி - பாம் ஜுமேராவில் தீ
- அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன.
மேலும் துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள பாம் ஹோட்டல் கட்டிடத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. இதில் நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்.
துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.






