என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்: லண்டனுக்கு புறப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கும் காட்சி...
    X

    குஜராத்: லண்டனுக்கு புறப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கும் காட்சி...

    • விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
    • பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×