என் மலர்
உலகம்

மெக்சிகோவில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்: தடைபட்ட அதிபரின் செய்தியாளர் சந்திப்பு
- மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின.
மெக்சிகோ சிட்டி:
தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story






