search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் பாஜக- ஆர்ஜேடி ஆதரவாளர்கள் இடையே மோதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. இணையதளம் முடக்கம்
    X

    பீகாரில் பாஜக- ஆர்ஜேடி ஆதரவாளர்கள் இடையே மோதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. இணையதளம் முடக்கம்

    • இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

    இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×