search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abuse"

    • முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
    • முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் 15 லட்சம் லிட்டர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முறைகேடாக பால் வாகனம் ஒன்று பாலை ஏற்றிச் செல்ல வந்தபோது அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் வேறு எண் கொண்ட வாகனத்தை கொண்டு வந்ததையொட்டி பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

    அந்த பால் வாகனம் மூலம் தினமும் அண்ணா நகர், அயனாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் இன்று ஆவின் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு முன் பால் வினியோகிக்கப் பட வேண்டிய இடங்களில் வாகனம் வரவில்லை. பால் முகவர்கள், மளிகை, பெட்டிக் கடைக்காரர்கள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். காலையில் பால் கிடைக்காமல் பொது மக்களும் சிரமப்பட்டனர்.

    பின்னர் தாமதமாக பால் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு முகவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    அம்பத்தூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
    • பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

    பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.112 கோடிக்கு நிதி நிர்வாக முறைகேடுகள், நடந்ததாகவும் பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது, மற்றும் பல்கலைகழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்.

    மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில், பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • குழந்தைகளில் ஒருவர் டிராவிஸால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அக்குழந்தை இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
    • எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.

    அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார். போலீசார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அதன் பின்னர் நடந்த விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.

    கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

    ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    முன்கூட்டியே காவல்துறையை ஏன் அழைக்கவில்லை? என போலீசார் கேட்டனர். இது குறித்து காவல்துறையிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:

    "நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது. எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வத்திராயிருப்பு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் முறைகேடு நடந்துள்ளது.
    • இதனை கண்டித்து அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யு.சி. மேற்கு மாவட்ட தலைவர் அண்ணா துரை தலைமை வகித்தார். அ.தி.மு.க. கிளை செயலா ளர் செல்வம் முன்னிலை வகித்தார். வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 1236 பயனாளி கள் உள்ளனர்.

    திட்டத்தின் கீழ் தம்பிபட்டி கண்மாய், நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகள் மற்றும் நீர்நிலை கள் தூர்வாரும் பணி நடை பெறுகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி நடை பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

    தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் மகா லிங்கம், காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் தவமணி, பா.ஜனதா நிர்வாகி சந்தனகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ெபாதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ்சை மடக்கி சிறை பிடித்தனர்.
    • சாலையில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 4 மணிநேரம் நடந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடவம்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ெபாதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ்சை மடக்கி சிறை பிடித்தனர். மேலும் அரசு பஸ்சை சிறை பிடித்து 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேட்டிற்கு எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றனர். மேலும் சாலையில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 4 மணிநேரம் நடந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.

     திருப்பூர் :

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ந் தேதி முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புத் தினம் அனைத்து கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அனுசரிக்கப்பட வேண்டுமெனவும், மேலும் உறுதிமொழியினை அனுசரிக்கவும் ஆணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று மைய அலுவலக வளாகத்தில்முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன்-குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் , மனோ ரீதியாகவும் உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் ,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன், பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், துணைஆணையர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, உதவி ஆணையர்(நிருவாகம்) சந்தன நாராயணன், உதவி ஆணையர் (பொ) (கணக்கு) தங்கவேல் ராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.

    இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

    • வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • இளம்பெண்ணின் மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் 32 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வரு கிறார். இதனால் மாதத்திற்கு 2 முறை மட்டும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த இளம்பெண் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது மாமியாரும், குழந்தைகளும் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திடுக்கிட்டு விழித்த அந்த பெண்ணை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.

    எனவே மர்ம நபர் அவர் வாயை பொத்தி, தாக்கினார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். அதற்குள் அவரது சத்தம் கேட்டு, மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்.

    • ரெயில்வே தேர்வில் முறைகேடா? என மதுரை அதிகாரி விளக்கம் அளித்தனர்.
    • தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    மதுரை

    மத்திய ரெயில்வே துறையில் தொழில்நுட்ப உதவியாளர், ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய வேலைக்கான போட்டித் தேர்வு கணினி மூலம் நடந்து வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்வுகள் முடிந்து விட்டன.

    தற்போது 4-ம் கட்ட தேர்வு நடந்து வருகிறது. ரெயில்வே தேர்வில் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை ரெயில்வே அதிகாரி கூறுகையில், "ரெயில்வே தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், கேள்வித்தாள்கள் 256 அளவு இலக்க குறியீடுடன் கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளது.

    விண்ணப்பதாரருக்கான தேர்வு மையம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவற்றில் கூட வரிசை தவிர்க்கப்பட்டு உள்ளது. வினாத்தாளிலும் கேள்விகள் மற்றும் 4 விருப்ப விடைகள் வரிசையாக இருக்காது.

    ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசை இல்லாத கேள்விதாள்கள் கணினியில் தோன்றும். தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது ஆதாரமற்றது.

    தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே பணிகளுக்கான தேர்வு, நேர்மையான முறையில் நடந்து வருகிறது.

    குறுக்கு வழியில் ரெயில்வே வேலை வாங்கித் தருவதாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரெயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்து இருப்பதாக தெரிவித்தார்.

    • அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்திய குடிமகன், குடிமக்களாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் .

    மனரீதியாகவும், உடல்ரீ தியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மருத்துவமனை, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோ ர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    • அதிக லாபம் தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி
    • 7 பேர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார். இவர் காளப்பட்டி பகுதியில் அல்பா போரெக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 8 முதல் 20 சதவீதம்வரை வட்டி தருவ தாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். ஆன்லைன் மூலம் கோவை, நெல்லை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த ஏராளமான வர்களிட ம்கோடி க்கணக்கில் மோசடி செய்துவிட்டு விமல் குமார் தலைமறைவாகிவிட்டார்.

    பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் மோசடி தொடர்பாக அதன் உரிமையாளர் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி, தம்பி சந்தோஷ்குமார், மற்றும் அருண்குமார், கவிதா என்ற கங்காதேவி, யுவன், சுஜித் ஆகிய 7 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் முக்கிய ஆசாமியான விமல்குமாரும், அவரு டைய மனைவி ராஜேஸ்வரியும், தம்பி சந்தோஷ்குமாரும் துபாயில் பதுங்கி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் களை கைதுசெய்ய சர்வதேச போலீஸ் (இண்டர்போல்) உதவியை நாட பொருளா தார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வழக் கில் தொடர்புடைய புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது32), கோவை டேன்பிட் கோர்ட் டில் நேற்று சரண் அடைந் தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அருண்குமார் பலரிடம் பணம் வசூலித்து கொடுக்கும் கலெக்சன் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

    இந்த வழக்கின் முழு தகவல்களை அறிய, அருண்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக விரைவில் கோவை டேன் பிட் கோர்ட்டில் மனுதாக் கல் செய்ய உள்ளனர்.

    7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது.
    சீனர்களுக்கு விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது.

    இதற்கு இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்
    ×