நாங்குநேரி அருகே வீடு புகுந்து பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் - வர மறுத்ததால் தாக்குதல்

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இளம்பெண்ணின் மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நாங்குநேரி அருகே வீடு புகுந்து பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் - வர மறுத்ததால்  தாக்குதல்
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் 32 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வரு கிறார். இதனால் மாதத்திற்கு 2 முறை மட்டும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த இளம்பெண் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது மாமியாரும், குழந்தைகளும் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திடுக்கிட்டு விழித்த அந்த பெண்ணை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.

எனவே மர்ம நபர் அவர் வாயை பொத்தி, தாக்கினார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். அதற்குள் அவரது சத்தம் கேட்டு, மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com