search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Explanation"

  • இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
  • நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.

  இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

  இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

  இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

   

   

  என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
  • 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

  கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு பொன்னாடை அணிவித்து கூட்டணியை உறுதி செய்தனர்.

  இதன் பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்தினர். இதன் பின்னர் பேட்டி அளித்த அவர்கள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

  ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

  இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா மறுத்துள்ளார்.

  பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் அது தொடர்பான தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

  இதையடுத்து அ.தி.மு.க.வுடன் 3-வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்த தே.மு.தி.க. தயாராகி வருகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க.வினர் கூறும் போது, அ.தி.மு.க.வின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். அவர்கள் கூப்பிட்டதும் 3-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

  3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையின் போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

  • காற்று வீசும் திசைக்கு எதிரே குச்சிகளால் முட்டு கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்க வலியுறுத்தல்
  • 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டுகோள்

  கோவை,

  வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

  காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

  கொடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். திராட்சைக் கொடியில் போர்போப் பசையைப் பூச வேண்டும். அதிகப்படியான இலைதழைகளை கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.

  உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

  காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் கட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.

  காய்கறி மற்றும் இதர தோட்டக் கலைப் பயிர்களுக்கான வழி முறைகள் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

  காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா தவண்ணம் பாதுகாக்க வேண்டும்.

  கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வ லைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  நிழல்வலைக்குடில் மற்றும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.

  • தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?
  • டாக்டர் நிவேதிதா கார்த்திகா விளக்கமளிக்கிறார்.

  மதுரை

  தாய்மை அடையும் பெண் கள் சர்க்கரை வியா தியை கையாளும் முறைகள் குறித்து மதுரை அன்யா என்டோக்ரின் மற்றும் டையப்பெட்டீஸ் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாக்டர் நிவேதிதா கார்த் திகா அளித்துள்ள வழிகாட் டல்கள் வருமாறு:-

  வழிகாட்டல்கள்

  முழு தானியங்கள், குறை வான கொழுப்பு கொண்ட புரதச்சத்துக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவான கிளைசீமிக் இன்டிசஸ் கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுப்பதற்கு அளவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு கள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது அவசியம்.

  அத்தியாவசிய ஊட்டச் சத்து அளிக்கையில் ரத்த சர்க்கரை அளவுகளை நிலையாக வைக்கும் தனிப் பட்டதாக்கப்பட்ட உணவு திட்டங்களுக்கு டையட்டீஷி யனுடன் ஒருங்கிணைய வேண்டும். நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்காக சமமாக விநியோகிப்பதற்கு கார்போஹைட்ரேட் கணக் கிடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

  நிலைத்தன்மை மிக்க சக்தி மற்றும் நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்கு முக்கிய உணவுகளுடன் பயிர்கள், கொழுப்பு இல் லாத இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற குறை வான ஜி.ஐ. உணவுகளை சேர்ப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்காக அவோகாடோஸ், நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற் றும் நெய் (மிதமான அள வில்) போன்ற ஆதாரங்களை சேர்ப்பது முக்கியம்.

  நிலையான ரத்த சர்க் கரை அளவுகளுக்காக நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிக ளிலிருந்து உணவில் உள்ள நார்சத்தை சாப்பிடுவது நீர்ச்சத்து, நார்ச்சத்தை அதி கரிக்க உதவும். ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தை நிர்வகிப்பதற்கு சிபா ரிசு செய்யப்பட்ட உடல் ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம்.

  ரத்த சர்க்கரை கட்டுப் பாட்டில் சாதகமான தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு தியானம், யோகா அல்லது ஆழமாக சுவாசிப்பதன் மூலமாக மன அழுத்தத்தை குறைப்பதற்கு பழகிக் கொள்வது, ரத்த சர்க்கரை அள வுகளில் இடையூறு களைத் தடுப்பதற்கு மற்றும் நலனை ஊக்குவிப்பதற்கு போதியளவு தூக்கத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

  உரிய நேரத்தில் அட் ஜஸ்ட் செய்வதற்காக வழக்க மாக ரத்த சர்க்கரை அளவு களை கண்காணிப்பது, திறன் வாய்ந்த சிகிச்சைகளுக் காக மருத்துவ தொழில் வல்லுனர்களுக்கு அவ்வப் போதைய தகவலை அளிப் பது, சாத்தியமாக இருந்தால், ரத்த சர்க்கரை ஒழுங்குப டுத்துவது மற்றும் பச்சிளம் குழந்தைக்கான ஊட்டச்சத் திற்காக தாய்ப்பால் ஊட்டு வதை கொள்ள வேண்டும்.

  ஒவ்வொரு சர்க்கரை வியாதி பயணமும் தனித்தன் மையானது. இந்த வழிகாட் டுதல்கள் அடிப்படையா னவை. ஆனால், தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்காக மருத்துவ தொழில் வல்லுனர்களுடன் ஒருங்கிணைவது அவசியமா னது. முன்கூட்டியே செய லாற்றுவது, தகவல் பெற்ற அணுகுமுறைகள் மற்றும் பலம் வாய்ந்த மருத்துவ தொடர்புகள் மூலமாக, தாய்மையின் மகிழ்ச்சியை தழுவிக் கொள்கையில் நீங்கள் மிகச் சரியாக சர்க் கரை வியாதியை நிர்வகிக்க லாம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.
  • ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

  அம்பை:

  அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் (சீப்பர்ஸ்) கீழ் ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் அம்பாசமுத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, விவசாயி ராக்சமுத்து ஆட்டுகொட்டகையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.

  சிங்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் தேவிகா பேசுகையில், மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்கள் மற்றும் உண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.

  ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கும் அன்று இருமடங்கு அடர்த்தியுள்ள உண்ணி நீக்க மருந்தை ஆடுகள் அடைக்கும் கொட்டகைகளின் உட்புற சுவர் மற்றும் சுற்றுபுறத்தின் தரைகளிலும் தெளித்து அங்குள்ள உண்ணிகளை ஒழித்தால் உண்ணிகளின் தாக்குதலை தவர்க்கலாம் என்றார். விவசாயி ராக்சமுத்துவிற்கு வயலில் உண்ணி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் மூலம் ஆடுகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

  இதற்கான ஏற்படுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
  • மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

  அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந

  டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

  மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

  இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

  • வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
  • பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

  வெள்ளகோவில்:

  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் கைதிகளை எவ்வாறு நடத்துவது, காவல் நிலையத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்பாடுகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

  • அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
  • தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

  கடலூர்:

  கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் உழவர் சந்தை அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பணி புரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மாலை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினர். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அம்மா உணவகம் சாவியை வழங்க வேண்டும் என அதிரடியாக  உத்தரவிட்டனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் காரணமின்றி எங்களை பணி நீக்கம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரனை நேரில் சந்தித்தனர். அப்போது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர்களை அரசியல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சார்பில் அம்மா உணவகத்தில் பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்தபோது மதியம் விற்பனைக்காக சமைக்கப்பட்ட உணவு அதிகாலையில் சமைத்து சூடான முறையில் இல்லாமலும், தரமற்றதாகவும் இருந்தது. மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தினமும் அதிகளவில் அம்மா உணவகத்தில் உணவு உண்டு வருகின்றனர். ஆனால் முழு அளவில் கணக்கில் காட்டாமல் மாநகராட்சி கருவூலத்தில் விற்பனையாகும் தொகையை குறைவாக செலுத்தி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகத்தில் தினசரி 3600 ரூபாய் செலுத்தி உள்ளார்கள். ஆனால் தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 1000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். விதிமுறைகளின் படி அம்மா உணவகங்களில் மதியம் உணவில் கட்டாயமாக தயிர் சாதம் சமைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தெரிவித்தும் தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

  மேலும் சமையல் செய்யும்போது பணியாளர்கள் கட்டாயம் தலையில் தொப்பி அணிந்து, கையுறைகள் அணிந்தும் பணி புரிய வேண்டும். சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அம்மா உணவகம் விதிமுறைகளுக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் இது போன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் 3 தினங்களுக்குள் எழுத்து மூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடலூரில் அம்மா உணவகத்தின் நீக்கப்பட்ட பெண் பணியாளர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற உணவு சமைத்திருப்பதாகவும், சரியான முறையில் விற்பனை செய்யப்பட்ட பணம் செலுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பதாகவும் தெரிவித்து அதற்கு விளக்க கடிதம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
  • வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் முன்னோடி விவசாயி மணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் குழந்தைவேல் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

  மாணங்கொண்டான் முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.

  வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

  எனவே, இதை தவிர்க்க ஆறுகளில் உள்ள வெங்காய தாமரை ெசடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.

  கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

  கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.