என் மலர்
நீங்கள் தேடியது "Police station duties"
- வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் கைதிகளை எவ்வாறு நடத்துவது, காவல் நிலையத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்பாடுகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.






