search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Girls"

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெல்லை:

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று சந்திப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
    • மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கெருக்கான்பட்டி கிராமம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இந்த பகுதியில் 1995-ம் ஆண்டு முதல் காலை 7. 40 மணியளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு பஸ் இயக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டு காலை 6.15 மணியளவில் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், பணிமனை கிளை மேலாளர் மாரியப்பனிடம் பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருக்கிறது. காலை 6.15 மணிக்கு வரும் பஸ் இந்த பகுதியில் பெயருக்காக இயக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் சரியான நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் கைதிகளை எவ்வாறு நடத்துவது, காவல் நிலையத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்பாடுகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் பள்ளி மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கரூர் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    கரூர்:

    சென்னையில் சமீபத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததில் உயிரிழப்பு ஏற்படும் வகையில் அடுத்தடுத்து விபத்து சம்பவம் நிகழ்ந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்டவையும் அவ்வப்போது நிகழ்ந்தன. எனவே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும் என தென்னக ரெயில்வே அறிவுறுத்தியது. அதன்படி கரூர் ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பிரிவு சார்பில் பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலில் ஆபத்தான பயணத்தை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை கையில் பிடித்தபடி கரூர் ரெயில் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர். இதனை கரூர் ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் தர்மாராம் பவாரி தொடங்கிவைத்தார்.

    அப்போது சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களை செய்யலாமா?, பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடியே மாணவிகள் சென்றனர். மேலும் ரெயில் பயணத்தின் போது பெண்கள் அதிக நகைகளை அணிய வேண்டாம், இரவு நேரத்தில் ஜன்னல் அருகே தலை வைத்துப்படுப்பதை தவிர்க்கவும், ரெயில் பெட்டி நுழைவு வாயிலில் நின்று பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரெயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

    அப்போது ரெயில் நிலைய குற்ற சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க ஆர்.பி.எப். உதவி மைய எண் 182-ஐ அழைக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரூர் ரெயில் நிலைய மேலாளர் பாஸ்கர், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தலைமை ஆசிரியை விஜயராணி, உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×