என் மலர்

  நீங்கள் தேடியது "Ilayaraja"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடு விநியோகம்.

  சென்னையில் இந்திய கடலோரக் காவல்படையின் விமானத்தளம் சார்பில் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நாட்டின் பெருமைமிகு விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். 


  சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம், நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  மாணவர்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும். தேசிய கொடிகள், கொடிகளை கொண்ட பட்டைகள், கையேடுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
  • இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.

  விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். 

  பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். 

  முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.  

  இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

  புதுடெல்லி:

  விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

  கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.

  இதற்கிடையே, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இந்நிலையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

  புதுடெல்லி:

  விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

  இதற்கிடையே, கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

  இந்நிலையில், இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  சென்னை:

  மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.

  இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

  இதேபோல், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ரசிகர்கள் உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார்.
  இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்குக் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் கொடுத்து அதற்குத் தனியாகப் பணம் வசூலித்து வருகின்றன. இதே போல சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

  இளையராஜா

  இதற்கு முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கினார்களா என்பது தெரியாது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இளையராஜா, ரசிகர்கள் தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் சில பாடல்களை அவரே நேரில் பாடி பதிவு செய்திருப்பதையும் பார்க்க முடியும். இந்த செய்தி இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
  பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.

  இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

  இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த கண்மணி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின் பின்னணி இசையை வாசிக்கிறார்.

  கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த கருத்தை வரவேற்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது பாடல்களை ‘96’ படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அப்படி செய்வது இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுவதாக கூறினார்.
  இளையராஜா இசையமைத்த பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தன. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று அறிவித்தார். மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

  வெளிநாடுகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி வந்தார். அவருக்கும் இளையராஜா நோட்டீசு அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சில படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘96’ படத்திலும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.  அந்த படத்தில் “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

  இந்த நிலையில் ‘96’ படத்தில் பணியாற்றிய ஒருவர் ‘96’ படத்தில் நாங்கள் பயன்படுத்திய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் அனுமதி பெறப்பட்டது. அந்த பாடல்களுக்கு ராயல்டியும் கொடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
  இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதால், இளையராஜா-எஸ்.பி.பி. இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

  இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

  ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். #Ilayaraja #SPB
  இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக கல்லூரிகளில் அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது. அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த இசை ரசிகர்களுக்கு அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி போன்ற இளையராஜாவின் முக்கியமான பாடகர்கள் பங்கேற்கவில்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது.

  பாடல்களின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் சட்ட சிக்கல்கள் நிலவி வந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.  தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந்தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

  இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா, எஸ்பிபி தரப்பில் கேட்டதற்கு இது இன்னும் உறுதிபடுத்தப்பட வில்லை என்றனர்.

  ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா - யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். #Ilayaraja #Yesudas
  விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்’. `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.

  இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். ``பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `நந்தலாலா’ படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.  `கத்தி’ படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. `தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin