video-வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை; பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கமான இரங்கல்

"பாக்யராஜ் தமிழ் சினிமாவுக்குத் தந்த பங்களிப்பு அளப்பரியது."
Ilaiyaraaja  condolences over Bhagyaraj's demise
Published on

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னன், இயக்குநர் கே பாக்யராஜ் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை உலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, பாக்யராஜின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இயக்குநர் பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். என்னுடைய ஆரம்பகாலத்தில் மிகவும் நெருங்கி பழகியவர் நண்பர் பாக்யராஜ். அவரது மறைவால் மிகவும் வருந்துகிறேன். ஸ்கிரின்பிளேவில் இந்தியாவில் முதன்மையான இடத்தை வகித்தவர்.

நான் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் உடனடியாக சென்னைக்கு வந்து, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். பாக்யராஜ் தமிழ் சினிமாவுக்குத் தந்த பங்களிப்பு அளப்பரியது.

பாக்யராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் உடலுக்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நாளை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com