'நான் என் வழியில் ரொம்ப க்ளீனா போய்கிட்டு இருக்கேன்' - சர்ச்சைகளுக்கு இளையராஜா பதிலடி வீடியோ

இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.
'நான் என் வழியில் ரொம்ப க்ளீனா போய்கிட்டு இருக்கேன்' - சர்ச்சைகளுக்கு இளையராஜா பதிலடி வீடியோ
Published on

இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com