என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NCERT"
- தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை என்சிஇஆர்டி வலியுறுத்தியுள்ளது.
- கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மன அழுத்தமாக இருக்கக்கூடாது என்றார்.
புதுடெல்லி:
என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெற்றோர்கள் ஆங்கிலவழிப் பள்ளிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் அல்லது போதுமான பயிற்சி இல்லாவிட்டாலும் தங்கள் குழந்தைகளை அத்தகைய பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். இது தற்கொலைக்கு சமமானது.
எனவேதான், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை வலியுறுத்தியுள்ளது.
நாங்கள் இப்போது 121 மொழிகளில் பிரைமர்களை உருவாக்கி வருகிறோம். அவை இந்த ஆண்டு தயாராக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது வேர்களுடன் இது இணைக்க உதவும்.
நாம் ஆங்கிலத்தில் திணறத் தொடங்குகிறோம். அங்குதான் அறிவு இழப்பு உள்ளது. மொழி ஒரு செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். அதை முடக்கக்கூடாது.
கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மன அழுத்தமாக இருக்கக்கூடாது. மாணவர்கள் சொற்பொழிவு கற்றலில் இருந்து விலகிச்செல்ல வேண்டும். புதுமையான முறையில் சிந்திக்க உதவும் அனுபவக் கற்றலின் நன்மைகளைப் பெற வேண்டும் என தெரிவித்தார்.
- என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
- பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.
குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக பேசிய என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, "இளம் மாணவர்களுக்கு கலவரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சமூகத்தில் அவர்கள் வெறுப்பை உருவாக்கவோ வெறுப்புக்கு ஆளாகவோ கற்றுக் கொடுக்க வேண்டுமா? வளர்ந்த பிறகு அவர்களே தெரிந்து புரிந்து கொள்வார்கள். கல்வியின் நோக்கம் வன்முறையைத் தூண்டுவதல்ல. எல்லா விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.
என்.சி.இ.ஆர்.டி தலைவரின் இந்த பொறுப்பற்ற பதில் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்கு உள்ளது. இது வரலாற்றை மறைத்து திரிக்கும் செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் எம்.பி ஒவைசி, " பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதி இழிவுபடுத்தப்பட்டு, 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களைக் கொண்டாடும் வகையில் குழந்தைகள் வளரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
- பள்ளிகளில் ஏன் வன்முறை பற்றி கற்பிக்க வேண்டும்?
- ஆக்கப்பூர்வமான மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறோம்.
புதுடெல்லி:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி, '3 குவிமாடம் கொண்ட கட்டுமானம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. நடத்திய ரத யாத்திரை, கரசேவகர்கள் செயல்பாடுகள், மசூதி இடிப்பு, பா.ஜ.க. அரசுகள் டிஸ்மிஸ், கலவரம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
அயோத்தி பற்றிய பகுதிகள், 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாக சுருக்கப்பட்டுள்ளது. முந்தைய விரிவான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வழிவகுத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாய மன்னர்கள் அக்பர், ஹுமாயுன், ஷாஜகான், அவுரங்கசீப், ஜஹாங்கீர் ஆகியோரின் சாதனைகள் பற்றிய 2 பக்க பகுதி நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:-
பள்ளிகளில் ஏன் வன்முறை பற்றி கற்பிக்க வேண்டும்?. நாங்கள் ஆக்கப்பூர்வமான மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறோம். வன்முறை மனநிலையும், மனச்சோர்வும் கொண்ட மனிதர்களை அல்ல. வன்முறையை பற்றி கற்பிப்பது எங்கள் நோக்கம் அல்ல. வளர்ந்த பிறகு மாணவர்களே அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று புரிந்து கொள்வார்கள்.
1984-ம் ஆண்டு நடந்த கலவரம் பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டபோது இதுபோன்ற ஆட்சேபனை எழுந்தது இல்லை. எனவே, தற்போதைய எதிர்ப்பு தேவையற்றது. மேலும், பாடப்புத்தக மாற்றம் என்பது உலகம் முழுவதும் நடக்கும் நடவடிக்கை. இது ஆண்டுதோறும் நடக்கிறது. இதை மேலே இருந்து யாரும் திணிப்பது இல்லை. கல்வி நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்கிறது.
மேலும், இதை காவிமயமாக்குதல் என்பது தவறு. நடந்த உண்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரலாற்றை சொல்லித் தருகிறோம். அது எப்படி காவிமயமாக்குவது ஆகும்?
சில தகவல்கள் பொருத்தமற்றவையாக மாறும்போது, அவை நீக்கப்படுகின்றன. புதிய தகவல்கள் சேர்க்கப்படுகின்றன. கொரோனா காலத்தில், மாணவர்களின் சுமையை குறைக்க சில பகுதிகள் நீக்கப்பட்டன. அதுபோல்தான் எல்லா நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
- புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டது.
- 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை பகுதி நீக்கப்பட்டுள்ளது.
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'முக்குவிமான கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.
குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு பழைய பாடப்புத்தகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் நினைவாக அவரது தளபதி மீர் கட்டிய மசூதி தான் பாபர் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் 1528 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இடத்தில முக்குவிமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று பாபர் மசூதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்குவிமான கட்டிடத்தில் இந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
- ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.
- ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள்.
- புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டம்.
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரப்பா நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி பற்றிய வரலாற்று பாடத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
அதில், அரியானாவில் உள்ள சிந்து சமவெளி தளமான ராகிகர்ஹியில் உள்ள தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பண்டைய டி.என்.ஏ பற்றிய சமீபத்திய ஆய்வுகள், ஹரப்பான்களும் வேதகால மக்களும் ஒரே மாதிரியானவர்களா என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு ஆரிய குடியேற்றத்தை நிராகரித்தது.
ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள். ஆரிய படையெடுப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி என்.சி.இ.ஆர்.டி அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது
'5,000 ஆண்டுகாலமாக எந்த இடறுமின்றி இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்' என என்.சி.இ.ஆர்.டி 12-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
'ஹரப்பா மக்களின் மரபணு இன்று வரை தொடர்கிறது. மேலும், தெற்காசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் ஹரப்பா மக்களின் வழித்தோன்றல்களே', என என்.சி.இ.ஆர்.டி கூறுகிறது
ஆரம்ப கால ஹரப்பா மற்றும் பிற்பகுதி ஹரப்பா நாகரிகங்களுக்கு இடையே 'இடைவெளி இருந்தது' பற்றிய தகவல்களும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.
'ஹரப்பன்களுக்கும் வைதீக (Vedic) மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தியும் புதிய பாடத்தில் என்.சி.இ.ஆர்.டி சேர்த்துள்ளது.
ஆரியர்களின் குடியேற்றத்தை நிராகரிக்க (அரியானா) ராக்கிகர்கி தளத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியை என்.சி.இ.ஆர்.டி குறிப்பிடுகிறது
இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.
- தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
- புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் வெளிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்டி) தெரிவித்து உள்ளது. இந்தத் தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ.இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்ததாவது:-
கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட உள்ள புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.
- அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
- பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம் உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாடப் புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.
- 12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த வகையில், என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும் என்று என்சிஇஆர்டி-ன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "பாரத்" என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பாட புத்தகங்களில் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.
இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.
அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்